• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல் மருத்துவ நிறுவனத்தின் 2 ஆம் கட்ட அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்தல்
- வாய்சார்ந்த சுகாதார சிகிச்சை சேவைக்காக அதிகரித்துவரும் கேள்வியை நிறைவு செய்வதற்கும் அதேபோன்று பல் மருத்துவ துறைக்குரிய கற்பித்தல் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டும் கொழும்பு பல் மருத்துவ நிறுவனம் நவீன தொழினுட்பம் மற்றும் வசதிகள் கொண்ட நிறுவனமொன்றாக அபிவிருத்தி செய்யும் பணிகளை இரண்டு கட்டத்தில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அதன் முதலாவது கட்டம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, அதன் இரண்டாவது கட்டத்தின் கீழ் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை கூடம், காவறை, எக்ஸ்ரே பிரிவு, களஞ்சிய வசதிகள், நிருவாகம் மற்றும் ஏனைய பிரிவுகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தி ஆய்வுகூடத்தில் புதிய வசதிகளை உருவாக்கி ஒன்பது மாடிகளைக் கொண்ட கட்டடமொன்று நிருமாணிக்கப்படுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கொழும்பு பல் மருத்துவ நிறுவனத்தை அபிவிருத்தி செய்யும் இரண்டாம் கட்டத்திற்கான பணிகளை 1,200 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் மேற்கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.