• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2015ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- நிதி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரநிலை, மத்திய வங்கியின் கணக்குப் பணிகள், நிதிக் கொள்கைக்குரியதாக கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட பிரதான நிருவாக ஏற்பாடுகள், அங்கீகரிக்கப்பட்ட பிரதான சட்டங்கள் மற்றும் தரவுகள் உள்ளடக்கப்பட்ட, 2015 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.