• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டிணைக்கப்பட்ட நிறுவன வங்குரோத்து சட்டங்களுக்குரிய கூட்டிணைக் கப்பட்ட சட்டங்களை மறுசீரமைத்தல்
- பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள வர்த்தக கம்பனிகள் சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தற்போது நடைமுறையிலுள்ள 1884 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க வங்குரோத்து கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் தற்போதைய நெகிழ்ச்சிகரமான வர்த்தக தொழில்முயற்சிகள் சம்பந்தமாக எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லையென தெரியவந்துள்ளது. அதேபோன்று அரசாங்க தொழில்முயற்சிகளின் மறுசீரமைப்பின் போது வங்குரோத்து நிலைக்குரியதாக புதிய சட்டங்களின் தேவை எழுந்துள்ளது. வங்குரோத்து நிலைசார்ந்த நிலைமைகள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு பொருத்தமானதும் பயனுள்ளதுமான சட்டங்கள் ஆக்கப்படுமாயின் "வர்த்தக நடவடிக்கைகளை நடாத்திச் செல்வதற்கு இலகுவான நாடுகள்" பற்றிய சுட்டெண்ணில் உயர் ஸ்தானமொன்றை உரியதாக்கிக் கொள்வதற்கு இலங்கைக்கு இயலுமாகும். இதற்கமைவாக, தற்போதைய தேவைகளையும் பொருத்தமான நிறுவன வங்குரோத்து நிலை சட்டத்தினையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.