• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விவசாயிகளே தங்களுடைய நாற்று நெற் தேவையை உற்பத்தி செய்து நிறைவு காணும் வழிமுறையொன்றை உருவாக்குதல்
- இலங்கை சனத்தொகைக்குப் போதுமானவாறு அரசி வழங்குவதற்கு வருடாந்தம் 4.1 மில்லியன் மெற்றிக் தொன் நெல் உற்பத்தி செய்ய வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டொன்றில் சிறு மற்றும் பெருபோகங்களில் 1.2 மில்லியன் ஹெக்டயார்களில் நெல் செய்கை பண்ணப்படுவதோடு, ஹெக்டயார் ஒன்றில் சுமார் 4.2 மெற்றிக் தொன் அறுவடை கிடைக்கின்றது. பதிவு செய்யப்பட்ட உயர் நாற்று நெல் பெற்றுக் கொண்டு விவசாயிகள் தமக்குத் தேவையான நாற்று நெல் உற்பத்தி செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான நாற்று நெல்லின் தரத்தினை அதிகரித்துக் கொள்ள முடியுமாவதோடு, அதற்காக பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவு முறையொன்றான "பரசூட் தெட்டி" முறையை பயன்படுத்தி நாற்று நெல் உற்பத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ நெல்லிருந்து 100 கிலோகிரம் இலகுவாக உற்பத்தி செய்து கொள்ளலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு அடுத்த போகத்தில் 2 1/2 ஏக்கரில் பயிர் செய்வதற்குப் போதுமானதாகும். மரபுவழிமுறையுடன் ஒப்பிடும் போது "பரசூட்" என்னும் பெயரில் அழைக்கப்படும் புதிய முறையைப் பயன்படுத்தி நெல் செய்கை பண்ணப்படும் போது நாற்று நெல் தேவையை 75 சதவீதத்தால் குறைத்துக் கொள்ளலாமென்பதோடு, இந்த முறையில் செய்கைப் பண்ணப்படுவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தவும் கம இரசாயன பாவனையை குறைக்கவும் முடியும். அதேபோன்று கன்றுகள் நடுவதற்குத் தேவையான ஆள் வலுவையும்கூட சுமார் 90 சதவீதத்தால் குறைத்துக் கொள்ள முடியும். இந்த சகல விடயங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நெல் செய்கை பண்ணப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 180,000 பேர்கள் மேற்போந்த நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபெற வைப்பதற்குத் தேவையான வசதிகளை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.