• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
- மத வழிபாட்டுத் தலங்களை பழுதுபார்க்கும் பணிகளுக்காக பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் மரங்களை இலவசமாகவும் சலுகை விலைக்கும் வழங்கும் பொருட்டிலுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் 2013-11-29 ஆம் திகதியிலிருந்து 2014-12-31 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிக்குள் 146 மதவழிபாட்டுத் தலங்களுக்கு 1,008 மண் கியூபுகளும் 16 மதவழிபாட்டுத் தலங்களுக்கு 1,043 கியூபிக் அடி மரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேற்போந்த சலுகை காலத்தை நீடிக்குமாறு மதவழிபாட்டுத் தலங்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அரசாங்க பாடசாலைகள், வைத்தியசாலைகள், முப்படை போன்ற அரசாங்க நிறுவனங்களும் தங்களுடைய நிருமாணிப்புகளுக்கு பறிமுதல் செய்யப்பட்ட மணல் மற்றும் மரங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. இதற்கமைவாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்தி பல்வேறுபட்ட மதவழிபாட்டுத் தலங்களுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் மணல் மற்றும் மரங்களை, சலுகை விலைக்கு வழங்கும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.