• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மாவட்டத்தின் ஹடஓயா நீர்தேக்கத்தை நிருமாணித்தலும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துதலும்
- அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் அமைவிடம் மற்றும் பௌதிக பின்னணி என்பவற்றை கவனத்திற் கொள்ளும் போது கமத்தொழிலுக்கும் கால்நடை வளர்ப்புக்கும் இந்த பிரதேசங்களில் மிகச் சிறந்த நிலை உள்ளமை தெரியவந்தாலும் இங்குள்ள காணிகள் மற்றும் நீர் மக்களின் நலனுக்கு ஏற்றவாறு முறையாக முகாமிக்கப்படவில்லை. அதேபோன்று ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தப் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகக்குறைந்த பிரதேசங்களாக இனங்காணப்படலாம். ஹடஓயா, விலஓயா மற்றும் கரந்தஓயா ஆற்றுப்படுக்கைகளில் உள்ள குளங்களின் கீழ் பிரதேசத்திலுள்ள சுமார் 6,500 ஹெக்டயார் காணியில் பொதுவாக பயிர்செய்யப்படுகின்றது. இதில் ஹடஓயாவுக்கு இருபக்கமும் அமைந்துள்ள வயல்கள் நீர் நிரம்புவதனால் பெரும்போக நெற்செய்கை பணிகள் தாமதமடைவதோடு, இந்தக் குளங்களில் கொள்ளளவு போதுமானதாக இல்லாமையினால் சிறுபோகத்திலும் பயிர்ச் செய்கைகள் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. ஹடஓயா வெள்ளப் பெருக்கினை கட்டுப்படுத்தி இருபோகங்களிலும் பயிர் செய்வதற்கு இயலுமாகும் வகையில் குளங்களை நிரப்புவதற்கும், பொத்துவில், லாகுகல, சியம்பலாண்டுவ, பானம பிரதேசங்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மேலதிகமாக 5,300 ஹெக்டயாருக்குத் தேவையான நீர்பாசன வசதியை வழங்குவதற்கும் இயலுமாகும் வகையில் ஹடஓயாவுக்கு குறுக்காக நீர்த்தேக்கம் ஒன்றை நிருமாணிப்பதற்கும் உரிய நீர்ப்பாசன மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்குமாக 11,000 மில்லியன் ரூபா செலவில் ஹடஓயா நீர்தேக்க கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.