• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு இறைவரிச் சட்டத்தினை இலகுபடுத்தலும் நவீனமயப்படுத்தலும்
- இலங்கையில் வருமானவரி விதிக்கும் பொருட்டு தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்து இற்றைவரை, காலத்திற்கு காலம் செய்யப்பட்ட திருத்தங்களின் காரணமாக இந்த சட்டமானது உட்சிக்கல் நிலைக்கு ஆளாகியுள்ளது. ஆதலால், மிக எளியதும் முதலீட்டாளர்களை கவரும் விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரி மூலதத்துவங்களுக்கும் அமைவாக வரிச் சட்டத்தை நவீனமயப்படுத்துவது காலத்தின் தேவையாகவுள்ளது. இதற்கமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு சருவதேச தரங்களுக்கு அமைவாக தௌிவானதும் வெளிப்படையானதுமான விதத்திலும் நவீன வரி முறையில் இருக்க வேண்டிய அம்சங்களுடனுமான உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை மீண்டும் வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.