• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"ஆதரணீய ஶ்ரீ லங்கா” உள்நாட்டு சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
- சுற்றுலா தொழிலின் மூலம் இலங்கையின் கிராமிய பொருளாதாரத்திற்கு நன்மையை கிடைக்கச் செய்வதற்காக உள்நாட்டு சுற்றுலா பயணிகளை குறியிலக்காகக் கொண்டு சுற்றுலாத் தொழிலொன்றை மேம்படுத்துவதும் அதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்வதும் மிக முக்கியமானதாகும். 2016 மே மாதத்தில் கொண்டாடப்படவுள்ள சுற்றுலாத் தொழிலின் பொன்விழாவிற்கு ஒருங்கிணைவாக "ஆதரணீய ஶ்ரீ லங்கா” என்பதன் கீழ் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை குறியிலக்காகக் கொண்ட சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை "காண்போம், இரசிப்போம், பாதுகாப்போம்" என்னும் தொனிப்பொருளின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலுள்ளமுள்ள சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இருப்பினும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு உட்படாத இடங்கள், கலாசார மரபுரிமைகள், பிரதேசத்திற்கே உரியதான உணவுவகைகள் போன்றவை தொடர்பிலான சுற்றுலா விவரணங்களை சகல மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் தயாரிப்பதற்கும் சுற்றுலா மேம்பாட்டிற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.