• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 யூலை மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலாத்துறை அமைப்புடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடொன்றினை இலங்கையில் நடாத்துதல்
- ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தொழினுட்ப உதவியுடன் வளவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கலாக வெளிநாட்டவர்கள் சுமார் 100 பேர் கலந்துகொள்ளும் “சுற்றுலாத்துறை; அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான ஊக்குவிப்புக் காரணி” என்னும் தொனிப்பொருளின் கீழ் சருவதேச மாநாடொன்றை ஒழுங்கு செய்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சும் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அதிகாரசபையும் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் முன்னுரிமை கவனம் செலுத்தப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க செயற்பாட்டினை நடைமுறை ரீதியில் எடுத்துக் காட்டுவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும். ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் நாயகமும் நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த கலாநிதி மொஹமட் யூனுஸ் அவர்கள் அடங்கலாக பல பிரமுகர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளார்கள். இதற்கமைவாக, இலங்கை சுற்றுலாத் தொழிலின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான அங்கமாக ஒழுங்கு செய்யப்படும் மேற்போந்த சருவதேச மாநாடானது 2016 யூலை மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு பாசிக்குடாவில் நடாத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.