• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-05-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருகோணமலை நகரப் பிரதேசத்தினதும் சுற்றியுள்ள நகரங்களினதும் திட்டமிடல் மீளாய்வு
- தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்திக்கான பிரதான வலயமொன்றாக திருகோணமலை இனங்காணப்பட்டுள்ளதோடு, இதனை கமத்தொழில் மற்றும் வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியமுள்ளது. அதேபோன்று திருகோணமலை அபிவிருத்தி பிரதேசத்திற்குள் உற்பத்தி பணிகளுக்காகவும் சுற்றுலா கைத்தொழிலுக்காகவும் வலயங்களை தாபிக்கும் சாத்தியமும் கூட நிலவுகின்றது. அநுராதபுரம், பொலன்நறுவை, மட்டக்களப்பு மற்றும் ஹிங்குரக்கொட போன்ற நகரங்களும் திருகோணமலை அபிவிருத்தி பணிகளுடன் இணைத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றியும் கலந்துரையாடல்களின் போது ஆராயப்படவுள்ளது. ஆதலால் மாறுபடும் மற்றும் அதிகரித்துச் செல்லும் தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவதனை குறியிலக்காகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டும் திருகோணமலைக்கு கட்டமைக்கப்பட்ட விரிவான பாரிய திட்டமொன்றையும் தயாரிக்கும் பொருட்டு இந்த பிரதேசத்தில் திட்டமிடல் மீளாய்வொன்றைச் செய்யும் தேவையுள்ளது. இதற்கமைவாக, திருகோணமலை பிரதேசம் சம்பந்தமாக திட்டமிடல் மீளாய்வொன்றைச் செய்வதற்காக இத்தகைய பணிகள் தொடர்பில் சிறந்த அனுபவம் கொண்ட வெளிநாட்டு கம்பனியொன்றின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.