• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்படைகளையும் சேர்ந்த படை வீரர்களினது சம்பளத் திருத்தம் - 2016
- அரசாங்க சேவையாளர்களுக்கு அவர்களுடைய அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட்ட விசேட படிகளையும் 10,000/= ரூபாவைக் கொண்ட இடைக்காலப் படியையும் கட்டம்கட்டமாக அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 2016‑02‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 03/2016 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டது. அதேபோன்று இதற்கு ஒருங்கிணைவாக அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள், அரசுடைமைக் கம்பனிகள் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களின் சம்பளங்களைத் திருத்துவதற்குத் தேவையான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களும் கூட ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத் திருத்தங்களுக்கு ஒருங்கிணைவாக முப்படைகளையும் சேர்ந்த படை வீரர்களினது சம்பளத்தைத் திருத்தும் பொருட்டு தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வௌியிடுவதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.