• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கப்படும் பாடசாலைப் புத்தகங்களை திறந்த கேள்வி நடவடிக்கை முறையிலிருந்து விலகி அச்சிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளல்
- 2017 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடப் புத்தகங்களிலிருந்து 30 சதவீதமான அளவினை அச்சிடும் பொருட்டிலான கேள்வியை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கும் அரசாங்க அச்சக திணைக்களத்திற்கும் கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினாலும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.