• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழில் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்கள் முகம்கொடுக்கும் இடையூறுகளுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான பிரேரிப்பு
- ஐரோப்பிய யூனியனினால் விதித்திருந்த மீன் ஏற்றுமதித்தடைக்கு காரணமாயிருந்த பாதகமான நிலைமைகளைத் தவிர்க்கும் நடவடிக்கையொன்றாக சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்துதல், ஒழுங்குறுத்தப்படாத மற்றும் அறிக்கையிடப் படாத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கான தண்டனைகள் சர்வதேச தரங்களுக்கு அமைவான விதத்திலும் உரிய சட்டமீறுகைகளின் கடும் தன்மைக்கு ஏற்றவாறும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த தண்டனைகளின் கடும்தன்மை காரணமாக சுற்றிவளைப்பு மற்றும் கைதுசெய்தல் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ள கடற்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கலாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை நடைமுறைப்ப டுத்தும் பணிகளில் ஈடுபடும் தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்கள் இடையூறுக ளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் பெரியளவில் முகம்கொடுக்க நேரிட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களினால் குறித்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அவர்களுக்கு இடையூறு விளைவித்தல் சம்பந்தமாக தற்போது நடைமுறையிலுள்ள 25,000/= ரூபாவைக் கொண்ட தண்டப் பணத்திற்குப் பதிலாக 50,000/= ரூபாவைக் கொண்ட ஆகக் குறைந்த தண்ட தொகையிலிருந்து ஆரம்பித்து உரிய படகின் நீளத்திற்கு அமைவாக அமுலிலுள்ள விதத்தில் தண்டத்தொகையை அதிகரிப்பதற்கு இயலுமாகும் விதத்தில் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தைத் திருத்துவதற்கும் கரையோரப் பாதுகாப்பு படைப்பிரிவின் உத்தியோகத்தர்களையும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தகுதிவாய்நத உத்தியோகத்தர்களாக ஏற்பதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.