• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 செப்ரெம்பர் 05 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ள உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான வலய குழுவின் 69 ஆவது கூட்டத்தொடரின் அனுசரணையை வகித்தல்
- உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான வலய குழு 1948 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டதோடு, உலக சனத்தொகையின் 1/4 உள்ள தென்கிழக்கு ஆசிய வலயத்தில் நிலவும் சுகாதார பிரச்சினைகள் மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றுவழிகளுக்கு தலைமைத்துவமும் தொழினுட்ப ஒத்துழைப்பும் இதனூடாக வழங்கப்படுகின்றது. இலங்கை இந்தக் குழுவுடன் நெருங்கி செயலாற்றுவதோடு, இலங்கை சுகாதாரத்துறை சம்பந்தமாக அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி உலகிற்கு எடுத்துக்காட்டி அதன் 69 ஆவது கூட்டத்தொடரை 2016 செப்ரெம்பர் 05 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கான அனுசரணையை வகிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.