• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதியோப்பியா அடிஸ்அபாபாவில் வதிவிட இராஜதந்திர தூதரகமொன்றைத் தாபித்தல்
- ஆபிரிக்க வலயத்திலுள்ள தன்னாதிக்கம் மிக்க 54 நாடுகளில் 38 நாடுகளுடன் இலங்கை தற்போது உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளைப் பேணிவருவதோடு, இதில் வதிவிட இராஜதந்திர தூதரகங்கள் இயங்குவது 04 ஆபிரிக்க நாடுகளில் மாத்திரமாகும். தேறிய உள்நாட்டு உற்பத்திக்கு அமைவாக கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் பாரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடொன்றான எதியோப்பியாவுடன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் ஆபிரிக்க யூனியனுக்குச் சொந்தமான நாடுகளுடன் நெருங்கிய உறவினை கட்டியெழுப்பும் நோக்கிலும் இந்த யூனியனின் தலைமையகம் அமைந்துள்ள எதியோப்பியா அடிஸ்அபாபாவில் தூதரகமொன்றைத் தாபிக்கும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.