• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் 2016 ஆம் ஆண்டு சார்பில் வலுவாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள் அதன் உபதலைவர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும்
- ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக ஆணைக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட வலுவாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பசுபிக் கலந்துரையாடல் மாநாடு 2016 ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதியிலிருந்து 05 ஆம் திகதிவரை தாய்லாந்தின் பாங்கொக் நகரத்தில் நடாத்தப்பட்டது. வலுவாதார அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்கான வலய நடவடிக்கை பற்றியும் பின்னூட்டல் மற்றும் செயற்பாடுகளை மீளாய்வு செய்தல் அடங்கலாக வலுவாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பசுபிக் கலந்துரையாடல் அரங்கினை தாபித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பிலும் ஆரம்ப உடன்பாடுகள் இங்கு காணப்பட்டன. 2016 ஆம் ஆண்டு சார்பில் வலுவாதார அபிவிருத்தி தொடர்பிலான ஆசிய பசுபிக் கலந்துரையாடல் அரங்கின் தலைவர் பதவிக்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை பற்றியும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள் அதன் உபதலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை பற்றியும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.