• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சமுத்திரக் கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காக எக்ஸ்போ 2012 YEOSU Korea Foundation நிறுவனத்துக்கும் இலங்கை சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினைக் கைச்சாத்திடல்
- நாடொன்றின் கடற்றொழில், துறைமுக மற்றும் சுற்றுலாத்துறைகளின் அபிவிருத்திக்கும் அதேபோன்று சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தாக்கம் செலுத்தும் முக்கிய வளமொன்றாக சமுத்திரசூழலைக் கருதலாம். சமுத்திரம் மற்றும் கரையோரங்களில் நிலவும் மனித செயற்பாடுகள் மூலம் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படும் கழிவுகள் காரணமாக அதிக செலவினை செய்து இந்த சுற்றாடலை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாத விதத்திலான சுற்றாடல் சேதங்களும்கூட சமுத்திர சுற்றாடலில் நிகழுகின்றன. சமுத்திர சுற்றாடலில் சேரும் கழிவுப்பொருட்களில் 60 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவு பிளாஸ்ரிக் வகைகளென இனங் காணப்பட்டுள்ளதோடு, இலங்கை சமுத்திர கழிவுகளை விடுவிப்பதில் உலகில் 5 ஆம் இடத்தைக் கொண்டுள்ளது. தென் கொரியாவின் கடல் மற்றும் கடற்றொழில் அமைச்சின் நிதியுதவியின் மீது 2012 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட எக்ஸ்போ 2012 YEOSU Korea Foundation ஆனது உலக சமுத்திர சுற்றாடலின் நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு நல்கும் நோக்கில் இயங்குகின்றது. இலங்கையில் சமுத்திர கழிவு முகாமைத்துவத்திற்குத் தேவையான ஆற்றல் அபிவிருத்தி பற்றிய ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்காக மேற்போந்த ஆதாரநிலையமானது உடன்பட்டுள்ளதோடு, இதற்காக இந்த ஆதாரநிலையத்துக்கும் சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.