• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வசன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் காலப்பகுதிக்குள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால் இணங்கியொழுகப்பட வேண்டிய வழிகாட்டல்கள்
- அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்ட அரசியலமைப்பின் 104 ஆ(5) ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேர்தல் அல்லது சர்வசன வாக்கெடுப்பு சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடாத்தப்படுவதனை உறுதி செய்யும் பொருட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களினாலும் செயற்பாட்டாளர்களினாலும் இணங்கியொழுகப்பட வேண்டிய வழிகாட்டல்கள் / தொழிற்பாட்டுக் கொள்கைகள் உள்ளடக்கப்பட்ட 2016‑02‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 1955/19 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.