• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் முற்றுமுழு தாக அரசுடமையாக்கப்பட்ட கம்பனிகளின் சம்பளத் திருத்தம் - 2016
- அரசாங்க சேவையாளர்களுக்கு அவர்களுடைய அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட்ட விசேட படிகள் மற்றும் 10,000 ரூபாவைக் கொண்ட இடைக்காலப்படி ஆகியவற்றைக் கட்டம்கட்டமாக அடிப்டை சம்பளத்தில் சேர்ப்பதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016‑02‑25 ஆம் திகதியிடப்பட்டதும் 03/2016 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கை வௌியிடப்பட்டதோடு, இதற்கமைவாக அரசாங்க சேவையாளர்களின் சம்பளம் ஏற்கனவே திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைவாக அரசாங்க கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் முற்றுமுழுதாக அரசுடமையாக்கப்பட்ட கம்பனிகளின் அடிப்படை சம்பளத்தை திருத்தும் பொருட்டு தேசிய சம்பளங்கள், பதவியணிகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை அறிவுறுத்துரைகளை வௌியிடும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.