• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கான உத்தேச 17 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் பணிகள்
- இந்தக் கட்டட நிருமாணிப்புக்கு 2000 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தபோதிலும் பல்வேறுபட்ட காரணங்களினால் நிருமாணிப்பு பணிகள் தாமதமடைந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் கட்டடத்தை நிருமாணிக்கும் பொருட்டு கொங்றீட் தூண்களுடனான அத்திவார நிருமாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5,688.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் இந்தக் கட்டடத்தை நிருமாணிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.