• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - தெற்கு அதிவேக பாதையின் தெற்கு பகுதியான பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான பகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தின் மீதி நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி 03 புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- தெற்கு போக்குவரத்து அபிவிருத்திப் பாதையின் தெற்கு பகுதியான பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான பகுதியை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தின் மீதி நிதி ஏற்பாடான 1.93 பில்லியன் ரூபாவை பயன்படுத்தி பிரதேச வீதிகள் 11ஐ புனரமைத்தல், தெற்கு அதிவேக பாதையின் பொலிஸ் கடமைகளுக்காக 04 மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்தல் இந்த அதிவேகப் பாதையின் 114 ஆம் கிலோ மீற்றருக்கு அண்மையில் சரிவு நிலப்பகுதியை புனரமைத்தல் போன்ற கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.