• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் உத்தேச மருத்துவ பீடத்திற்காக காணியொன்றை கொள்வனவு செய்தலும் கட்டடத் தொகுதியை நிருமாணித்தலும்
- 1991 ஆம் ஆண்டில் தேசிய பல்கலைக்கழகமொன்றாகத் தாபிக்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழகமானது தற்போது 4 கல்விப் பீடங்களைக் கொண்டுள்ளது. அண்மைக் காலத்தில் துரிதமாக அபிவிருத்தியடைந்துள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையை இணைத்துக்கொண்டு மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவபீடமொன்றை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக காணியொன்றைக் கொள்வனவு செய்வதற்கும் தேவையான கட்டடங்களை நிருமாணிப்பதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.