• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிக்கும் போது அடிப்படையாகக் கொள்ள வேண்டிய தகுவிதிகள்
- தௌிவாக இனங்காணப்பட்ட கொள்கை வேலைத்திட்டமொன்று இல்லாமை, உயர் முகாமைத்துவத்தில் தீர்மானங்கள் எடுப்பதில் காணப்படும் பின்னடைவு, சந்தைப்போட்டியினைக் கவனத்திற் கொள்ளாது தீர்மானங்கள் எடுத்தல், நியமனங்களுக்கு அரசியல்வாதிகள் தலையிடுதல், அரசியல் கட்சிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சித்தல், முகாமைத்துவத்திற்கு ஆட்களை நியமிக்கும்போது முறையான வழிகாட்டல்கள் இல்லாமை போன்ற விடயங்கள் அரசாங்க தொழில்முயற்சிகளின் வினைத்திறன் குறைவடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆதலால், அரசாங்க தொழில்முயற்சிகளின் முகாமைத்துவம் மற்றும் தொழிற்பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு தலைவர்களையும் பணிப்பாளர் சபையையும் நியமிக்கும் போது முறையானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான வழிமுறையொன்றைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும். இதற்கமைவாக, அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் பிற விசேட நிறுவனங்களின் தலைவர் / பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்களை நியமிக்கும் போது முன்மொழியப்படுவோர்களின் தகுநிலையை ஆராய்ந்து சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக விசேட குழுவொன்று அதிமேதகைய சனாதிபதியில் நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இத்தகைய நியமனங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் முகாமைத்துவ அனுபவம், உச்சவயதெல்லை, பதவிக்காலம் மற்றும் பதவி வகிக்கப்படும் காலப்பகுதி வரையறை, பொறுப்புக்கள் தொடர்பிலான பிரச்சினைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள், தகைமையீனம் போன்றவை உள்ளடக்கப்பட்ட தகுவிதிகளை ஏற்புடைத்தாக்கிக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.