• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கிக்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளல்
- உள்நாட்டு நிதிமுறைமையை நிலையாகப் பேணுதல், உள்நாட்டுப் பணத்தின் நிலைபேறான தன்மையையும் இலங்கை நாணயத்தின் சர்வதேச நிலைபேறான தன்மையையும் பாதுகாத்தல் பேணுதல் அதேபோன்று இலங்கையில் கமத்தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல் போன்ற நோக்கங்களுக்குரியதாக விரிவான ஒத்துழைப்பு அடிப்படையில் செயலாற்றும் பொருட்டு மக்கள் சீனக் குடியரசின் வர்த்தக வங்கியொன்றான சீன அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை மாண்புமிகு பிரதம அமைச்சரின் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.