• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016 - 2018) - 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
- உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை (2016 - 2018) துரிதப்படுத்தி, இதற்குரியதாக 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மேலதிக பயிர் உற்பத்தியில் தன்னிறைவைக் காணும் பொருட்டு தேவையான விதை மற்றும் நடுகைப் பொருட்களை சிறுபோகத்தில் இலவசமாக வழங்குதல், "உணவு நச்சுத்தன்மையற்ற கமச்செய்கை" மேம்பாட்டிற்காக உணவு நச்சுத்தன்மையற்ற நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளைத் தொடர்ந்தும் ஊக்குவித்தல், இந்த அறுவடைகளை விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், முழுமொத்த நிகழ்ச்சித்திட்டத்தையும் கையாள்தல், கண்காணித்தல், பின்னூட்டல் மற்றும் முனனேற்ற மீளாய்வு மாகாண, மாவட்ட மற்றும் பிராந்திய மட்டத்தில் நடாத்துதல் போன்றவை உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.