• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்திற்காக காணி சுவீகரிக்கப்படுவதனால் பாதிக்கப்படும் தரப்பினர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
- கொழும்பு தலைநகரம் மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்படும் பாதிப்பினைக் கட்டுப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், நிறுவனங்களை அபிவிருத்தி செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு 56 உப கருத்திட்டங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் பெரும்பாலான நிருமாணிப்புகள் மற்றும் திருத்தவேலைகள் பிரதான நகரங்கள் மற்றும் சனநெரிசல் கொண்ட பிரதேசங்களின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதோடு, உத்தேச செயற்பாடுகளுக்கு தனியார் காணிகளும் சவீகரித்துக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை தாமதமின்றி செய்வதற்கும் காணி சுவீகரிக்கும் போதும் நட்டஈடு வழங்கும் போதும் உரிய தரப்பினர்களுக்கு ஆகக்கூடுதலான நியாயம் கிடைக்கக்கூடிய விதத்தில் விசேட கருத்திட்டங்களுக்கு காணி சுவீகரிக்கப்பட்டதன் விளைவாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்தும் பொருட்டு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் உள்ளடக்கப்பட்ட 2014-05-30 ஆம் திகதியிடப்பட்டதும் 1864/54 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணி சுவீகரிப்பு (நட்டஈட்டுக் கொடுப்பனவு) ஒழுங்குவிதிகளை ஏற்புடைத்தாக்குவதற்காக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.