• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழினுட்பம் சம்பந்தமான விரிவான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக மக்கள் சீனக்குடியரசின் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பினை புதிய பாதையிலிட்டு பிரதான பொருளாதார பிரிவுகளில் முதலீட்டு ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்வதற்காக மரபுவழி சாராத நிதி வழிமுறைகளின் மூலம் இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு சீனா தொழில்முயற்சி யாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கமைவாக, இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடு, பொருளாதாரம் மற்றும் தொழினுட்பம் சம்பந்தமான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்து வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மாண்புமிகு பிரதம அமைச்சரின் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.