• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில்பீட ஆராய்ச்சி மற்றும் பயற்சி கட்டடதொகுதி நிருமாணிப்புக் கருத்திட்டம்
- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில்பீட ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டடதொகுதி நிருமாணிப்பு சார்பில் 1,667,000,000 யப்பான் யென்களை (அண்ணளவாக 2,100 மில்லியன் ரூபா) கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் உலர்வலய கமத்தொழில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனுடன் மேற்கொள்வது இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கமாவதோடு, விலங்கியல், உயிரியல். கமத்தொழில் இராசயனவியல், கமத்தொழில் உயிரியல், கமத்தொழில் பொறியியல், கமத்தொழில் பொருளாதாரம் போன்ற துறைகளுக்கான எதிர்கால கேள்வியை ஈடுசெய்யும் பொருட்டு கமத்தொழில் பீடத்தின் நிபுணத்துவ துறைகளை அபிவிருத்தி செய்வதற்கும் இதன்கீழ் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் மானிய உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.