• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரிய கலங்களின் மூலப்படிம உற்பத்திக்கு வசதிகளை வழங்கும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி கல்வி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியின் 20 சதவீதம் சம்பிரதாயமற்ற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாயிலிந்து பெற்றுக் கொள்வது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் சூரிய சக்தி மற்றும் அது சம்பந்தமான கைத்தொழி லுக்கு ஒத்தாசை வழங்கும் பொருட்டு பல்கலைக்கழகபட்ட அபேட்சகர்கள், தொழில்பயிற்சி கல்லூரிகளின் மாணவர்கள், இராணுவ சேவையின் முன்னாள் உத்தியோகத்தர்கள், க.பொ.த(உ/த) தகைமை பெற்ற பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த மாணவர்கள் அடங்கலாக சுமார் 2,000 பேர்கள் சூரிய கலங்களின் உற்பத்தி, பொருத்துதல், சூரிய கலங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகள், சூரிய சக்தி மின் உற்பத்தி முறைமைகளின் சேவை வழங்குதல் தொடர்பில் உயர் செயற்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலநொய் பல்கலைக்கழகத்தினதும் மற்றும் சிவநந்தன் லெபோரட்டரிஸ் கம்பனியினதும் நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழிகாட் டல்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கும் பேராதனை, யாழ்ப்பாணம், ருஹூணு, களனிய பல்கலைக்கழகங்களில் உரிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளைத் தாபிப்பதற்காகவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையி னால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.