• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய புத்தாக்குநர் தினமொன்றை பிரகடனப்படுத்துதல்
- ஏதேனும் நாடொன்று மத்திய வருமான மட்டத்திலிருந்து உயர் வருமான மட்டம் வரை செல்லும் போது அதற்கு உறுதுணையாய் அமையும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் சகல வசதிகளையும் ஊக்குவிப்பை யும் புத்தாக்குநர்களுக்கு பெற்றுக் கொடுப்பது அந்த நாட்டின் பொறுப்பாகும். இலங்கை புத்தாக்குநர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்குதல், அவர்களை ஊக்குவித்தல், ஒன்று திரட்டுதல் போன்றவற்றுக்காக இலங்கைத் தாய் உருவாக்கிய மிகச் சிறந்த சிவில் பொறியியலாளரும் புத்தாக்குநரும் புத்தாக்கு நர் ஆணைக்குழுவின் முதலாவது ஆணையாளருமான தேசபந்து கலாநிதி (திரு) ஏ.என்.எஸ்.குலசிங்கவின் அவர்களின் ஜனன தினமாகிய ஒக்றோபர் 26 ஆம் திகதியை "தேசிய புத்தாக்குநர் தினம்" ஆக பிரகடனப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.