• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பிலான இலங்கை - சீன கூட்டுக் குழுவின் ஏழாவது கூட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு, இலங்கை அரசாங்கத் திற்கும் மக்கள் சீன குடியரசிற்கும் இடையில் சுற்றுலாாத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மாண்புமிகு பிரதம அமைச்சரின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.