• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கு விசேட சலுகை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஓர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "விருசர" சிறப்புரிமை அட்டை மூலம் வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசாங்க மற்றும் சில தனியார் நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது குறித்த சேவைகளுக்காக சலுகை பெற்றுக் கொள்ளும் சிறப்புரிமையை அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையை மேலும் விரிவுபடுத்தி "விருசர" சிறப்புரிமை அட்டை உரித்துடைய வலது குறைந்த இராணுவ வீரர்களுக்கு புகையிரத பயணச்சீட்டுக்கான பெறுமதியின் 50 சதவீதத்தை மாத்திரம் செலுத்தி புகையிரதத்தில் பயணிப்பதற்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்யும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
விருசர சிறப்புரிமை அட்டை வழங்கப்பட்டுள்ள வலதுகுறைந்த இராணுவ வீரர்களுக்கு சலுகை புகையிரத கட்டணங்களை அறிவிடுதல்