• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் துரிதமாக வளர்ச்சி அடையும் துறையாக சுற்றுலா கைத்தொழில் மாறியுள்ளது. Google நிறுவனத்தினால் செய்யப்பட்ட அண்மைக்கால ஆய்வுவொன்றுக்கு அமைவாக உலகின் சுற்றுலா பயணிகளின் 50 சதவீதத்திற்கு மேலானவர்களுக்கு அவர்களுடைய அடுத்த சுற்றுலா நிலையத்தை அல்லது அங்கு தங்கவேண்டிய இடம் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் செயற்படுகின்றமை தெரியவருகின்றது. ஏற்கனவே உலக சனத்தொகையின் 40 சதவீதத்திற்கு கூடுதலானோர் இணையதளத்தை பயன்படுத்துவதோடு, சுற்றுலா பயணிகளுக்கு அவர்களுடைய பயண இடம்பற்றி தீர்மானிப்பதற்குத் தேவையான பின்னணியைத் தயாரிக்கும் போதும் சுற்றுலா பயண இடங்களை பிரபல்யப்படுத்தும் போதும் இணையத்தை ஊடகமாகக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் முன்னுரிமை பெறுகின்றன. இந்த நாட்டின் சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக இனங்காணப்பட்ட சந்தைகளை குறியிலக்காகக் கொண்டு திறமுறை டிஜிட்டல் வர்த்தக நிகழ்ச்சித்திட்டமொன்றை 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கை சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக "டிஜிட்டல் விளம்பர" திறமுறைகளை பயன்படுத்துதல்