• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- இந்த நாட்டுக்கு உரிமையல்லாத சில ஆக்கிரமிப்பு பயிர்கள் உயிரினங்கள் மற்றும் அவை துரிதமாக வியாபித்துச் செல்வதன் காரணமாக இலங்கையின் இயற்கை மற்றும் கம சுற்றாடல் முறைமைகளுக்கும் அதேபோன்று அவை சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ளக்கூடிய சட்டங்கள் இருந்தாலும் இதனால் உருவாகும் சுற்றாடல், பொருளாதார, சமூக பாதிப்புகளை கருத்திற் கொள்ளும் போது இலங்கையில் ஆக்கிரமிப்புசெய்துள்ள அந்நிய பயிர்கள் மற்றும் உயிரினங்கள் வியாபித்துச் செல்வதை கட்டுப்படுத்துவதற்கு அல்லது தடுப்பதற்கு முறையாக தயாரிக்கப்பட்ட தேசிய கொள்கையொன்று தேவையெனத் தெரியவந்துள்ளது. இதற்கமைவாக ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய பயிர்கள் மற்றும் உயிரினங்கள் வியாபித்து செல்வதை கட்டுப்படுத்துதல், அவற்றினால் உயிரினப் பல்வகைமைக்கு சுற்றாடல் முறைமைக்கு, பொருளாதாரத்திற்கு, சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பினை குறைப்பதற்காக சகல தரப்பினர்களுக்கும் உரிய துறை தொடர்பில் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய உயிரினங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைக்கும் அதற்குரியதான திறமுறை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைபடுத்தும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இலங்கையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்நிய உயிரினங்கள் தொடர்பிலான தேசிய கொள்கையும் இந்த உயிரினங்களின் கட்டுப்பாட்டுக்கும் முகாமைத்து வத்திற்குமான திறமுறை மற்றும் செயற்பாட்டுத் திட்டமும்