• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- 22 வருட சேவைக்காலம் பூர்த்தியாவதன் மேல் அல்லது ஒரே பதவியொன்றில் இருக்கக்கூடிய உச்சக்காலம் முடிவடைவதன் மீது முப்படைகளையும் சேர்ந்த தொழினுட்ப மற்றும் தொழிற் தகைமைகளை / அனுபவத்தைக் கொண்ட பல்வேறுபட்ட தரங்களுக்குரிய உத்தியோகத்தர்கள் பெருமளவில் வருடாந்தம் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இந்த உத்தியோகத்தர்களுக்கிடையில் கணிசமான அளவு பொறியியலாளர்கள், அளவையாளர்கள், மருத்துவர்கள், தாதிமார்கள், நிறைவுகாண் மற்றும் துணைமருத்துவ சேவையைச் சேர்ந்தவர்கள், தொழினுட்ப, விளையாட்டு போன்ற பல்வேறுபட்ட தொழில் மற்றும் தொழினுட்ப தேர்ச்சிமிக்கவர்கள் ஆவதோடு, இவர்கள் ஓய்வுபெறும் வயது அண்ணளவாக 42 தொடக்கம் 45 வயதாகும். இவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றக்கூடிய விதத்தில் உளரீதியிலும் தேகாரோக்கிய நிலையிலும் சிறந்த நிலையில் உள்ளவர்களாவர். இந்த மனிதவளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்மிக்கதாக பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் அரசாங்க சேவையில் காணப்படும் தொழினுட்ப மற்றும் தொழில் தேர்ச்சிமிக்கவர்களின் பற்றாக்குறைக்கு மாற்றீடாக தொழில் தகைமைகளைக் கொண்ட இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் சேர்மம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சில் நடாத்திச் செல்வதற்கும் இந்த சேர்மத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைப்பாறிய உத்தியோகத்தர்களின் சேவையை தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்க நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
முப்படைகளினதும் மனித வளங்களை தேசிய அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ளல்