• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
- சகல பிரசைகளுக்கும் தங்களுடைய தாய்மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணுவதற்கான உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அரசாங்க நிறுவனங்களில் சிங்களம் / தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அல்லது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செயலாற்றக்கூடிய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை பெருமளவில் நிலவுகின்றது. இந்த பிரச்சினைக்கு இடைக்கால தீர்வொன்றாக மாவட்ட ரீதியில் இருமொழி / மும்மொழி தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பிலான தகவல்களைக் கொண்ட தரவுத்தளமொன்றைத் தாபிப்பதற்கும் இந்த தரவுத்தளத்தின் தகவல்களை அனைத்து அரசாங்க நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு திறந்து வைப்பதற்கும் தேவையான சந்தர்ப்பங்களில் அவர்களுடைய சேவையை அரசாங்க நிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பணியகத்தினால் மாவட்ட ரீதியில் இருமொழி / மும்மொழி தேர்ச்சி பெற்ற வளவாளர்களின் தரவுத் தளமொன்றைத் தாபித்தல்