• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி கீழ் செயற்படுத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி கடன் திட்டம்
- சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சித் துறையை பலப்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு நிதி அமைச்சு கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொண்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரூபா என்னும் உச்ச கடன் தொகையின் கீழ் பத்து (10) வருட காலத்தில் மீண்டும் செலுத்தும் காலப் பகுதியுடன் புதிய தொழில்முயற்சியொன்றை ஆரம்பிப்பதற்கோ அல்லது நிலவும் தொழில்முயற்சியொன்றை விரிவுபடுத்துவதற்கோ வழங்கப்படும். இதற்கமைவாக இந்தக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பங்களிப்பு நிதி நிறுவனங்களுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.