• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் A3 பாதையின் ஜா-எலயிலிருந்து சிலாபம் வரையிலான வீதிப் பகுதியை புனரமைத்தல்
- போக்குவரத்து இணைப்பு மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் A3 பாதையின் ஜா-எலயிலிருந்து சிலாபம் வரையிலான வீதிப் பகுதியை புனரமைப்பதற்காக உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்திடமிருந்து 90.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட எடுத்தல் உரிமை கடன்தொகையொன்றைப் (அண்ணளவாக 126.7 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) பெற்றுக் கொள்ளும் பொருட்டு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சமவாயத்துடன் கடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் இந்த நிறுவனத்துடன் நிதிசார் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.