• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராம எழுச்சி" (கம் உதாவ) நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல்
- நாட்டில் சகல பிரதேசங்களிலும் வசிக்கும் வறிய மற்றும் குறைந்த சலுகைகளைக் கொண்ட மக்களுடன் இணைந்து அவர்களுடைய வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 1980 இல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட "கம்முதாவ" நிகழ்ச்சித்திட்டமானது மக்களின் பௌதிக, உள, சமூக மற்றும் மத சகவாழ்வுக்கு வீடு அடிப்படையாகும் என்னும் மூலதத்துவத்தின் மீது அமைந்து நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். ஆயினும், 1990 நடுப்பகுதியில் இந்த நிகழ்ச்சித்திட்டம் கைவிடப்பட்டது. மனித குடியேற்ற அபிவிருத்தியை சுற்றி கட்டியெழுப்பப்பட்ட முயற்சியும் இதற்கு இணையாக நடாத்தப்பட்ட கம்முதாவ கண்காட்சியும் இந்த ஆண்டிலிருந்து சில தேர்தல் தொகுதிகளைத் தழுவி பிராந்திய மட்டத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.