• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய வருமான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித் திட்டம்
- சகல மாவட்டங்களிலும் நகரங்கள் மற்றும் துணை நகரங்களில் வசிக்கும் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்காக வீடுகளை வழங்கும் ஐந்து (05) வருட கால நிகழ்ச்சித்திட்டமொன்று தனியார்துறையின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டமானது எதிர்வரும் ஐந்து (05) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்திட்ட ஒருங்கிணைப்புப் பிரிவொன்றை தாபிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.