• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்காக காணி யொன்றை கொள்வனவு செய்தல்
- தற்போது 630,000/= ரூபாவைக் கொண்ட மாதாந்த குத்தகை அடிப்படையில் பத்தரமுல்லை பலவத்தை பிரதேசத்திலுள்ள தனியார் கட்டடமொன்றில் நடாத்திச் செல்லப்படும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சை நிலையான இடத்தில் வைத்திருப்பதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடமொன்றை நிருமாணிப்பது பயனுள்ளதாகையினால் அதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து பத்தரமுல்லை புதிய பாராளுமன்ற வீதியிலுள்ள 40 பேர்ச்சஸ் காணித்துண்டொன்றை 31.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்குக் கொள்வனவு செய்யும் பொருட்டு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.