• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க இணக்கச்சபை சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்
- கட்டாயமாக இணக்கப்பாட்டுக்கு ஆற்றுப்படுத்த வேண்டிய பிணக்குகள் சம்பந்தமாக நடைமுறையிலுள்ள நிதிசார் பெறுமதியை 250,000/= ரூபாவிலிருந்து 500,000/= ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக வரையப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.