• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச சமூக நலன்புரி நிலையம் - மட்டக்குளிய
- கொழும்பு வடக்கு நகர பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் அன்றாடத்தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் சமூக நலன்புரி நிலையமொன்றை மட்டக்குளிய பிரதேசத்தில் நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையும் கொழும்பு மாநகர சபையும் கூட்டாக நிருமாணிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் சிறுவர் மற்றும தாய்நல கிளினிக்குகள், சுகாதார நிலையம், மின்னனு செனல் சேவை, நூலகம், உடற்பயிற்சி பிரிவு, கரம் மற்றும் செஸ் விளையாட்டு வசதிகள், அலுவலக வசதிகள் என்பன உருவாக்கப்படும். கட்டட நிருமாணிப்பானது ஒரு (01) வருட காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதோடு, நிருமாணிப்பின் முடிவில் கட்டடத்தின் உரிமையும் முகாமைத்துவமும் கொழும்பு மாநகர சபைக்கு கையளிக்கப்படும். 250 மில்லியன் ரூபா செலவில் உத்தேச மட்டக்குளிய சமூக நலன்புரி நிலையத்தின் நிருமாணிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.