• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹொரண நகர மத்தி அபிவிருத்தி திட்டம் - ஹொரண பேருந்து நிலைய அபிவிருத்தி கருத்திட்டம் - கட்டம் II நடைமுறைப்படுத்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் ஹொரண நகரம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாமை, வாகன நெரிசல் மற்றும் முறையற்ற காணிப் பயன்பாடு போன்ற பிரச்சினைகளும் அதேபோன்று நகரத்தின் அபிவிருத்திக்கான அடிப்படை தேவைகளும் இனங் காணப்பட்டுள்ளது. நகரத்திற்கு வரும் மற்றும் நகரத்திலிருந்த வௌியேறும் பேரூந்துகளுக்குத் தேவையான தரிப்பிட வசதிகளை வழங்குதல் நகரத்திற்கு வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு தற்போதுள்ள பேரூந்து நிலையத்தை அபிவிருத்தி செய்தல் நகர மத்திய வர்த்தகப் பிரதேசத்தை விருத்தி செய்தல் என்பன அத்தியாவசியமானவையாகும். இந்த பேரூந்து நிலைய அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டம் I இற்கான வேலைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, சிறிய கடை அறைகள். துப்பரவேற்பாட்டு வசதிகள் , பேரூந்துப் பயணிகளுக்கான மேடைகளை நிருமாணித்தல், நுழைவுப் பாதையை செப்பனிடல் என்பன உள்ளடக்கப்பட்ட ஹொரண பேருந்து நிலைய அபிவிருத்தி கருத்திட்டத்தின் - கட்டம் II இற்கான நிருமாணிப்பு வேலைகளை 182 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.