• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
- கம்பனிகளைக் கூட்டிணைத்தல், நிருவாகமும் முகாமைத்துவமும், ஒன்றிணைத்தல், கலைத்துமூடுதல், கம்பனிகளின் பிரச்சினைகளைத் தீர்த்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே இந்த சட்டமானது அண்ணளவாக 10 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள மதியுரைச் சபையினாலும் கணக்காய்வாளர் அதிபதியினாலும் மேற்போந்த சட்டத்திற்குத் துரிதமாக செய்யப்பட வேண்டிய சில திருத்தங்கள் இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உத்தேச திருத்தங்களை உள்ளடக்கி 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.