• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“எழுச்சிப் பொலன்நறுவை" மாவட்ட அபிவிருத்திக் நிகழ்ச்சித்திட்டத்தின் (2016 - 2020) கீழ் குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை புதிய புகையிரத பாதையை நிருமாணிக்கும் கருத்திட்டம்
- பொலன்நறுவை மற்றும் அதற்கண்மித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் உள்வாங்கப்பட்ட “எழுச்சிப் பொலன்நறுவை" மாவட்ட அபிவிருத்திக் நிகழ்ச்சித்திட்டம் (2016 - 2020) ஐந்து (05) வருட திட்டத்தின் கீழ் பிரேரிக்கப்பட்டுள்ள முக்கிய மற்றும் அத்தியாவசிய கருத்திட்டமொன்றாக குருநாகலில் இருந்து தம்புள்ளை ஊடாக ஹபரன வரை 80 கிலோ மீற்றர் நீளமான புகையிரதப் பாதையொன்றை நிருமாணிக்கும் கருத்திட்டம் இனங் காணப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பானதும் விரைவானதுமான போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை புகையிரதப் பாதை வலையமைப்புடன் இணைப்பதன் மூலம் பிரதேச அபிவிருத்திக் குறியிலக்கை அடைதலும் இந்தக் கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பு நல்குவதற்கு மக்கள் சீனக் குடியரசு உடன்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு கருத்திட்டப் பதவியணியொன்றை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் புகையிரதப் பாதைக்காக இனங் காணப்பட்டுள்ள காணியை சுவீகரிக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.