• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - வடிவமைப்பு மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ மதியுரைஞர்கள் சேவை
- பாரிய கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் மற்றும் கழிவுநீர் அகற்றும் செயற்பாட்டினை முறைப்படுத்தும் நோக்கில் பாரிய கொழும்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ, அபிவிருத்தி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழான ஆரம்ப வேலைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடன் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு வடிவமைப்பு, மேற்பார்வை மற்றும் நிறுவன அபிவிருத்தி மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.