• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஸ்டாட்டர் (STATOR) மீளிடுகை - விக்டோரியா மின் உற்பத்தி நிலையம்
- விக்டோரியா மின் உற்பத்தி நிலையம் மூன்று மின்பிறப்பாக்கிகளைக் கொண்டு இயங்குவதோடு, இவை முப்பது வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் மூலம் தொடர்ந்து வினைத்திறன் மிக்க சேவையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அவற்றை தாமதமின்றி திருத்த வேண்டுமென இது சம்பந்தமான தொழினுட்ப நிபுணர்களினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக விக்டோரியா மின் உற்பத்தி நிலையம் மூன்றாம் இலக்க மின்பிறப்பாக்கியின் ஸ்டாட்டர் (STATOR) மீளிடுகைக்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட கேள்விதாரருக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.