• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்
- கொழும்பு மாவட்டத்திற்குரிய 13 பிரதேச செயலகப் பிரிவுகளுள் விஸ்தீரணத்தில் கூடியதும் அதேபோன்று கூடுதலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்டதுமான பிரதேச செயலகப் பிரிவானது ஹோமாகம பிரதேச செயலகமாகும். அதன் அதிகார பிரதேசத்தின் பரப்பளவு 11,815.5 ஹெக்டயர்களாவதோடு, அங்கு வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 60,425 ஆகும். இந்தப் பிரிவிற்குள் வசிக்கும் இளைப்பாறிய அரசாங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 10,000 ஆக உள்ளதோடு, மொத்த சனத்தொகை 250,000 ஆகும். இந்த பிரதேச செயலகம் தற்போது நடாத்திச் செல்லப்படும் கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லாததோடு, பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான சேவையொன்றை வழங்கும் நோக்கில் 286.66 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் இந்த அலுவலகத்திற்காக 3 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.