• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய வைத்தியசாலைக்கான MRI ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்குதல், நிறுவுதல் மற்றும் விற்பனையின் பின்னரான சேவைகள் வழங்குவதற்கான கேள்வி
- தேசிய வைத்தியசாலையில் தற்போது தாபிக்கப்பட்டுள்ள MRI ஸ்கேனர் இயந்திரம் 15 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்ததோடு, இந்த வைத்தியசாலைக்கு புதிய MRI ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு MRI ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்குதல், நிறுவுதல் மற்றும் பராமரித்தல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக ஆகக்குறைந்த அனுசரணையான விலைமுன்வைப்பாளருக்கு கையளிக்கும் பொருட்டு பதில் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மொஹமட் காசிம் மொஹமட் பைசல் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.